News October 1, 2025
நாளை சிக்கன், மட்டன், மீன் சாப்பிட முடியாது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை இறைச்சி கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அகிம்சையை கடைப்பிடிக்கும் வகையில், கோழி, மீன், ஆடு உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள இறைச்சி உள்ளிட்ட மாமிசங்கள் மற்றும் கருவிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
திமுக கூட்டணி நிலையானது அல்ல: திருச்சி வேலுச்சாமி

தேர்தலில் தோற்க கூடிய கட்சியுடன் கூட்டணி அமைப்பதை தான் விரும்பவில்லை என காங்கிரஸின் திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் திமுக-காங்., கூட்டணி நிலையானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். தவெக உடனான கூட்டணியை விரும்பிய திருச்சி வேலுச்சாமி, தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
News March 14, 2026
ஹார்முஸ் நீரிணையை நோக்கி போர் கப்பல்கள்: டிரம்ப்

ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க் கப்பல்களை அனுப்பும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரானின் ராணுவ தளங்களை USA அழித்தாலும், ஹார்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் கண்ணி வெடி தாக்குதலை நடத்தலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், அங்கு எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்க ஈரானின் படகுகளை USA தாக்கும் என அவர் SM-ல் குறிப்பிட்டுள்ளார்.
News March 14, 2026
அதிசயம் நிறைந்த ஆக்டோபஸ்.. சுவாரசியமான தகவல்!

கடலின் அதிசய உயிரினமான ஆக்டோபஸ்க்கு 3 இதயங்கள் உள்ளன. மேலும் மூளை மட்டுமின்றி அதன் 8 கைகளிலும் நரம்பு மையங்கள் இருப்பதால், அதன் கைகள் தனியாக சிந்தித்து செயல்படுகின்றன. இதற்கு சிவப்பு ஹீமோகுளோபினுக்கு பதிலாக ஹீமோசயனின் இருப்பதால் ரத்தம் நீல நிறத்தில் உள்ளது. மேலும், இதுபோன்று ஆக்டோபஸ் பற்றி உங்களுக்கு தெரிந்த சுவாரசியமான தகவலை கமெண்ட் பண்ணுங்க.


