News October 1, 2025
Cup வேணும்னா ஆஃபீசுக்கு வா: SKY-ஐ சீண்டிய ACC தலைவர்

Asia Cup டிராபியை ACC தலைவர் மோசின் நக்வி எடுத்துச்சென்ற சம்பவம் பேசுபொருளானது. இந்நிலையில் அந்த டிராபியை இந்தியாவிடம் கொடுக்க தயார் என அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு விழாவை நடத்த வேண்டும் எனவும், அதில் இந்திய வீரர்கள் தன் கையால் டிராபியை வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இல்லையெனில் தன்னுடைய அலுவகத்துக்கு வந்து டிராபியை SKY பெற்றுக்கொள்ளட்டும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News October 1, 2025
ஜிவி பிரகாஷுக்கு அன்பளிப்பு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் பரிசு கொடுத்துள்ளார். ‘வாத்தி’ படத்திற்காக ஜிவி பிரகாஷ் 2-வது முறையாக தேசிய விருது வென்ற நிலையில், அவருக்கு தான் பயன்படுத்திய வெள்ளை நிற பியானோவை ஏ.ஆர்.ரஹ்மான் தந்துள்ளார். இது தனது வாழ்நாளில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு என்றும், இதை விட சிறந்த பரிசு ஒன்றை எதிர்பார்க்க முடியாது எனவும் x-ல் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
News October 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. ரூல்ஸ் மாறுது!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிமுறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் ₹8,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ₹1,000 பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
News October 1, 2025
இந்திய கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு இவ்வளவா!

2025 M3M Hurun இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரோஷினி நாடார் குடும்பங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. Perplexity நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31), இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் முறையாக இணைந்துள்ளார். இவர்களின் சொத்து மதிப்பை அறிய மேலே போட்டோக்களை Swipe செய்யவும்.