News October 1, 2025

BREAKING: தங்கம் விலை புதிய Record… இதுவே முதல்முறை

image

தங்கம் விலை ₹87 ஆயிரத்தை கடந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹10,890-க்கும், 1 சவரனுக்கு ₹240உயர்ந்து ₹87,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த10 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹4,800 அதிகரித்துள்ளது. இனி வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 12, 2026

கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல்: EPS

image

திமுக கூட்டணியில், அதன் கூட்டணிக் கட்சிகள் அடிமையாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மோசமான, கையாலாகாத திமுக அரசை அகற்றுவதே அதிமுக கூட்டணியின் நோக்கம் என்றார். இந்த தேர்தல் தான் கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல் எனவும் கூறினார். மேலும், காங்கிரஸிடம் கெஞ்சி திமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News March 12, 2026

ராசி பலன்கள் (12.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

முடிவுக்கு வரும் போர்? டிரம்ப் சிக்னல்

image

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளை USA, இஸ்ரேல் இணைந்து பெருமளவில் அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி அங்கு தாக்குதல் நடத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தான் விரும்பும் நேரத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நினைத்ததை விட அதிக சேதாரத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

error: Content is protected !!