News October 1, 2025
கதராடைகள் அணிந்திட CM ஸ்டாலின் வேண்டுகோள்

நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரை நினைவு கூர்ந்திடும் வகையில் அனைவரும் கதராடைகளை அணிய CM ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். நெசவாளர்களின் வாழ்வை மேம்படுத்த மாணவர்கள், அரசு அலுவலர்கள் கதராடைகளை வாங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்றிட கதர் கிராம தொழில் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News March 13, 2026
இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் ஈரானின் தாக்குதலால், பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் <<19367934>>PM மோடி ஈரான் அரசுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை<<>> நடத்தினர். அதன் பலனாக இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
News March 13, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 631 ▶குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ▶பொருள்: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.
News March 13, 2026
அந்த கொடூரர்களுக்கு மரண தண்டனை வேண்டும்: சீமான்

பள்ளி சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தினமும் அரங்கேறுகிறது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் TN-ல் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யும் இத்தகைய கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


