News April 14, 2024
‘சந்திரமுகி’ வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு

பி.வாசு இயக்கி ரஜினி நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சந்திரமுகி’ வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ரஜினி பல வெற்றிப் படங்களை தந்திருந்தாலும், பேய் படங்களுக்கு பெரிய தளம் அமைத்துக் கொடுத்தது இப்படம்தான். இதன் தாக்கம் முனி, அரண்மனை என இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஆக்ஷன், ஹாரர், காமெடி, பாடல் என அனைத்து தளத்தையும் தொட்ட இப்படம் இன்றும் பேசப்படுகிறது.
Similar News
News September 18, 2025
கர்சீப்பை வைத்து முகத்தை மறைக்கவில்லை: இபிஎஸ்

டெல்லியில் அமித்ஷா வீட்டிலிருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைக்கத்தான் செய்தேன்; மறைக்கவில்லை என்று இபிஎஸ் விளக்கமளித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இனிமேல் பாத்ரூம் போனால் கூட பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டுதான் போக வேண்டிய அரசியல் சூழல் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
News September 18, 2025
வாக்கு திருட்டுக்கு ECI உடந்தை: ராகுல் காந்தி

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
News September 18, 2025
விஜய்யின் கொள்கை என்ன? H.ராஜா

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பா.ஜ.கவை கொள்கை எதிரி என்று விமர்சிக்கும் விஜய்யின் கொள்கை என்ன என H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை தனது கொள்கைகளை பற்றி விஜய் பேசவில்லை என சாடிய அவர், தேசிய கட்சியான பாஜகவை எதிர்க்கும் தவெக தேச விரோத கட்சியா என்றும் கேட்டுள்ளார்.