News October 1, 2025
UG படிப்புகளில் சேர வயது வரம்பு உயர்வு

இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளில் UG படிப்பில் சேர்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளும், SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC பிரிவினர் மற்றும் மாணவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு கல்வியாண்டிலேயே அமலாகியுள்ளது.
Similar News
News October 1, 2025
‘கரூர் செல்கிறார் விஜய்’

கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக நடிகரும் தவெக நிர்வாகியுமான தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க, விஜய் விரைவில் கரூர் செல்ல இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெகவின் 2-ம் கட்ட தலைவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததாக குற்றஞ்சாட்டிய தாடி பாலாஜி, அவர்களது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
BREAKING: அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு

தீபாவளி பரிசாக, அகவிலைப்படி(DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, DA 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு நிலுவையுடன் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு DA உயர்வு வழங்கப்பட உள்ளது. SHARE IT.
News October 1, 2025
BCCI-யிடம் மன்னிப்பு கேட்ட ACC தலைவர்

ஆசிய கோப்பை இறுதி போட்டியின் போது நடந்த சம்பவங்களுக்காக ACC தலைவர் <<17882243>>மொசின் நக்வி<<>> BCCI-யிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சூழல் இந்த அளவிற்கு மோசமடையும் என எதிர்பார்க்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், துபாய் ACC அலுவலகத்திற்கு வந்து கோப்பையை பெற்று கொள்ள வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தை BCCI நிராகரித்துள்ளது.