News October 1, 2025

தவெக கூட்டங்களில் 247 பேர் காயம்

image

விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு முதல் கரூர் பரப்புரை வரையிலான கூட்டங்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வெளியிட்டுள்ளார். இதன்படி, விழுப்புரம் – 42, மதுரை – 14, திருச்சி – 12, திருவாரூர் – 17, அரியலூர் – 6, நாகை – 5, நாமக்கல் – 35, கரூர் – 116 என மொத்தம் 247 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கரூர் துயரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News March 13, 2026

வரலாற்று சின்னங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான்

image

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஈரானின் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சின்னங்களை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு நூற்றாண்டு கூட நீடிக்காத ஒரு ஆட்சி, பண்டைய காலங்களைக் கொண்ட நாடுகளை வெறுப்பது இயல்பானது என்றும், ஆனால் யுனெஸ்கோ எங்கே? அதன் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 13, 2026

எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: US

image

ஈரான் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய எண்ணெய் சரக்கு கப்பல்கள் காத்து கிடக்கின்றன. இந்நிலையில் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு தாங்கள் பாதுகாப்பு வழங்க முடியாது; ஈரானை தாக்குவதில் தான் தங்கள் கவனம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் துணிச்சலுடன் கடந்து செல்ல வேண்டும் என US கூறிய நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளது.

error: Content is protected !!