News October 1, 2025
புதுவை: பணம் வைத்து சூதாடம்-4 பேர் கைது

புதுவை நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் (செப்.29) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நெட்டப்பாக்கம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய சிலரை போலீசார் பிடித்து, அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்டவர்கள் மடுகரையைச் சேர்ந்த மணிகண்டன், கரையாம்புத்தூரைச் சேர்ந்த அய்யப்பன், பண்ருட்டியைச் சேர்ந்த விமல்ராஜ், நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என தெரியவந்துள்ளது.
Similar News
News March 16, 2026
ஆந்திராவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சிவசயிலம் கோயிலில் ஜோதிர்லிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இந்த வழிபாட்டில் இரண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க பூஜைகள் செய்தார்.
News March 16, 2026
புதுச்சேரி: இலவசங்களை கண்காணிக்க ட்ரோன்கள்

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், தேர்தல் கண்காணிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க, அதிகச் செலவு செய்யப்படும் தொகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய கேமராக்கள் வழங்கப்படும்” என்று கூறினார்.
News March 16, 2026
புதுவை: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


