News October 1, 2025
தேனி: காவலரிடம் ரூ.35 லட்சம் மோசடி!

தேனி, பெரியகுளத்தில், ஹவாலா பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி, மும்பை காவலர் லட்சுமணனிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தப்பி ஓடினர். இந்த மோசடியில் ஈடுபட்டதாக அஜித்குமார், முன்னாள் காவலர் நாகேந்திரன், ராம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
தேனி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <
News March 14, 2026
தேனி: அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களை அந்த அணியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதில் தேனி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கெளதம், உப்பார்பட்டி மேற்கு கிளைச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News March 14, 2026
தேனி அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தேனி அருகே தெற்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜனுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் மார்.12 அன்று ஈஸ்வரன் பைக்கில் சென்ற போது நாகராஜன் வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். காயமடைந்த ஈஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி GH-ல் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜனை கைது செய்தனர்.


