News October 1, 2025
தருமபுரியில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் பொதுவிதிமுறைகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டாடா 207, ஐசர் லாரிகள், டாடா ஏஸ், TVS XL Super Heavy Duty உட்பட 8 வாகனங்கள் வரும் 06.10.2025 தேதி காலை 11.00 மணிக்கு சேலம் பெங்களூரு ரோடு, 5K Cars Service Centre அருகில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
தருமபுரியில் மழைநீர் சேகரிப்பு குறித்து கலெக்டர் அறிக்கை

தருமபுரியில் பருவமழை காலம் தொடங்குதவற்கு முன்னதாக கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள் பழைமை வாய்ந்த நீராதாரக் கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்துவோம். நீரின் பயன்பாட்டிற்கும் நீரின் செறிவுட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை களைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். நிறுவப்பட்ட கட்டமைப்புகளை புணரமைத்து நில வளம், நீர் வளம் காக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவர்மன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன், தோப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் கண்ணன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News November 12, 2025
தருமபுரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 04.ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள 12,85,432 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிரப்புவதில் சந்தேகம் இருந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.


