News April 14, 2024
தொழிலாளி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரத்தினசாமி கடந்த 2018 ஆம் ஆண்டு டிச.27 ஆம் தேதி டேவிட், ஆனந்தகுமார் உள்ளிட்டோரால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை கோவை 3 வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கு விசாரணை முழுமையாக முடிவுற்று நேற்று நீதிபதி பத்மா டேவிட், ஆனந்தகுமார் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News September 26, 2025
கோவையில் 2 நாள் சிறப்பு வரி வசூல் முகாம்

2025-2026 முதலாம் அரையாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்த சிறப்பு வரிவசூல் முகாம்கள் கோவையில் அனைத்து மண்டலங்களிலும் வரும் 27,28 ஆகிய 2 நாட்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது.
News September 26, 2025
உணவு பதப்படுத்தும் தொழில்; மகளிருக்கு இலவச பயிற்சி!

கோவை: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை சார்பில் மகளிர்க்கான இலவச உணவு பதப்படுத்தும் பயிற்சி அக்.27 முதல் 26 நாட்கள் வடவள்ளியில் நடைபெறும். சிறுதானியம், காய்கறி பொருட்கள் உள்ளிட்டவை செய்முறை கற்பிக்கப்படும். 18–45 வயதினர் பங்கேற்கலாம். முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ், வங்கி கடன், மானியம் வழிகாட்டுதல் வழங்கப்படும். தொடர்புக்கு: 9944799995/8825812528
News September 26, 2025
கோவை கலெக்டர் ஆப்பீஸ்க்கு 7வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 7வது முறையாக மீண்டும் மிரட்டல் வந்ததால் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான மிரட்டலால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவியது.