News October 1, 2025

தர்மபுரி: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 11-12 ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 14 தேதி அன்றும், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15 தேதி அன்றும் நடைபெறவுள்ளன.பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சதீஸ் கூறியுள்ளார்.

Similar News

News March 12, 2026

தருமபுரி மக்களே ரூ.5000 வேண்டுமா!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கு

News March 12, 2026

தருமபுரி அருகே கிணற்றில் வாலிபர் சடலம்!

image

மாரண்டஅள்ளி அருகே அமானி மல்லாபுரம் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 28) கடந்த 6-ந் தேதி திடீரென மாயமானார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அமானி மல்லாபுரம் செல்லும் சாலை அண்ணாமலை என்பவரின் விவசாய நில கிணற்றில் ரஞ்சித் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரண்டஅள்ளி தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 12, 2026

தர்மபுரி மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.11) இரவு முதல் இன்று (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!