News October 1, 2025
விழுப்புரம்: மனித மிருகத்திற்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜேந்திரன் என்ற மனித மிருகம் அந்த சிறுமியை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்மான வழக்கில் ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
விழுப்புரம்: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் மூன்று தேர்தல் பொது பார்வையாளர்களும், ஐந்து தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் ஏதாவது இருந்தால் பொதுமக்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் கலெக்டர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
News March 19, 2026
விழுப்புரம் ரயில் பயணிகளின் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய பேசஞ்சர் தொடர் வண்டியில் அமைக்கப்பட்டுள்ள இருக்கை அமைப்பு பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பயணம் செய்யக்கூடிய இந்த ரயிலில் சீட் அமைப்பு 90 டிகிரி அளவில் உள்ளதால் பயணிகளுக்கு முதுகு வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News March 19, 2026
விழுப்புரம்: மின்வாரிய கணினி மையங்கள் இயங்காது

விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கண்டமங்கலம், செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணைநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்வாரிய கணினி வசூல் மையங்கள் தரம் உயர்த்தும் பணி நடந்து வருவதால் வருகிற மார்ச் 21ஆம் தேதி காலை 6 மணி முதல் 22ஆம் தேதி இரவு 12 மணி வரை மேற்கண்ட அலுவலகங்களில் இணையவழி சேவை செயல்படாது என விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


