News October 1, 2025
காலையில் இத சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

தினமும் காலையில் தண்ணீரில் ஊறவைத்த 10 பாதாமை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. பாதாமில் மெக்னீசியம், பாஸ்பரஸ், பயோட்டின், கால்சியம், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு ஆகியவை இருக்கிறன. இவை, ➤சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ➤இதய ஆரோக்கியம் ➤சர்க்கரை நோய் வரும் அபாயம் குறைவு ➤உடல் எடை கூடாது ➤High BP-ஐ கட்டுப்படுத்த உதவும் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
Similar News
News October 1, 2025
ஹிட் லிஸ்டில் இருக்கும் 2 அமைச்சர்களா?

திமுகவில் களையெடுக்கும் பணிகளை உதயநிதி-செந்தில் பாலாஜி காம்போ செய்துவருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோவை மா.செ.வான கார்த்திக் நீக்கப்பட்டு, அப்பதவிக்கு இளைஞரணியில் இருந்த செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டார். இதேபோல, கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி 2 அமைச்சர்கள் & 5 MLA-க்களுக்கு அடுத்த முறை சீட் வழங்காமல் கல்தா கொடுக்க திட்டமிடுவதாக தகவல் உலவுகிறது. அந்த 2 அமைச்சர்கள் யாராக இருக்கும்?
News October 1, 2025
உருவானது புயல் சின்னம்.. கனமழை கொட்ட போகுது

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
News October 1, 2025
முடிந்தால் அரஸ்ட் பண்ணுங்க.. போலீசுக்கு சவால்!

முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் என தெலுங்கு பட பைரஸியில் ஈடுபடும் ‘Ibomma’ தளத்தின் அட்மின் போலீசுக்கு சவால் விட்டுள்ளார். தங்களின் தளத்தை முடக்கினால், 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்தியர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டு, படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி மக்களை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.