News April 14, 2024

விருதுநகர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருச்சுழி அருகே கனையமறித்தான் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன்(58). இவர் நேற்று தேளி – தர்மம் சாலையில் ஆட்டோ ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது  திடீரென ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.‌ இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 20, 2026

சாத்தூர்: தண்ணீரில் மயக்க மருந்து கலந்து நகை திருட்டு

image

மதுரையில் பழவியாபாரம் செய்யும் மீனாள்(69) என்பவருக்கு இவரிடம் பழம் வாங்கிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் அழைத்ததின் பேரில் மீனாள் சாத்தூர் அருகே கோஸ்குண்டு பகுதியில் குறி கேட்க சென்றுள்ளார். பின் ஊருக்கு புறப்பட்ட மீனாள் அப்பெண்ணிடம் தண்ணீர் வங்கி குடித்துள்ளார். தண்ணீரில் மயக்க மருந்து கலந்ததை அறியாத மீனாள் மயங்கிய நிலையில் அப்பெண் மீனாளின் 5 பவுன் நகை, ரூ.10000 திருடிச் சென்றுள்ளார்.

News February 20, 2026

சிவகாசியில் விஜயபிரபாகரன் போட்டி?

image

திமுக – தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில் திமுக விடம் தேமுதிக சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பதொகுதிகள், நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட 20 தொகுதிகள் விருப்ப தொகுதிகளாக திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் விஜயபிரபாகரன் சிவகாசி அல்லது சாத்தூர் அல்லது விருதுநகரில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!