News October 1, 2025
விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(அக்.02) டாஸ்மாக் கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 3, 2026
விழுப்புரத்தில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

விழுப்புரத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர்
News April 3, 2026
விக்கிரவாண்டி: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுகா, நடுமுத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்(3!). தொழிலாளியான இவர், தினமும் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால், வீட்டில் உள்ளவர்கள் அவர் திட்டியதால், மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிரியில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 3, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.02) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


