News October 1, 2025

அறிவித்தார் சேலம் மாவட்ட ஆட்சியர்!

image

சேலம் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.org இணையதளத்தில் விண்ணப்பித்து 30.11.2026 க்குள் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அதன் நகலினை நேரில் அளிக்க வேண்டும் என சேலம் ஆட்சியர் தகவல்!

Similar News

News March 11, 2026

மத்திய அமைச்சரிடம் மனு

image

டெல்லியில் இன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரியை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி (ம) சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான இயற்கை எரிவாயு வழங்கலை உறுதி செய்யவும், தட்டுப்பாடின்றி சிலிண்டர் வழங்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அமைச்சரிடம் வழங்கி விரிவாகக் கோரிக்கை விடுத்தனர்.

News March 11, 2026

சேலத்தில் அடிதடி தகராறு: 17 பேர் மீது வழக்கு

image

சேலம் கல்பகனூரில் திருவிழா விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் வசூலில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த நிதீஷ் குமார் தரப்பினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பையும் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News March 11, 2026

சேலம்: எம்எல்ஏ அருள் அதிரடி எச்சரிக்கை!

image

சேலம் ஓமலூர் கோட்டக்கவுண்டம்பட்டியில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக் கோரி பாமக எம்.எல்.ஏ அருள் வலியுறுத்தியுள்ளார். வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் கடை மூடப்படாவிட்டால், அன்றைய தினம் காலை 11 மணிக்குத் தாமே நேரில் வந்து கடையைப் பூட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!