News October 1, 2025

தி.மலை வன்கொடுமை: கனிமொழி கண்டனம்

image

திருவண்ணாமலையில் இரு போலீஸார் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட SP விசாரணை மேற்கொண்டு வருவதாக தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸாரே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 1, 2025

கரூர் துயரம்: செந்தில் பாலாஜி விளக்கம்

image

கரூர் கூட்ட நெரிசலுக்கு செந்தில் பாலாஜி காரணம் என்று தவெக குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் துயரமானது; நினைத்துக்கூட பார்க்க முடியாதது. யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. இனி வரக்கூடிய நாள்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

News October 1, 2025

RBI-யிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா?

image

தங்கம் விலை ₹87 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், RBI-யிடம் மட்டும் சுமார் ₹4.32 லட்சம் கோடி மதிப்பில் 880 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் GDP வளர்ச்சி 6.8%ஆக அதிகரிக்கும்; சில்லறை விலை பணவீக்கம் 2.6%ஆக குறையும் எனக் கூறிய அவர், அமெரிக்காவின் வரி தொடர்பான முடிவுகள் வளர்ச்சியை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

News October 1, 2025

BREAKING: ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீஸ்

image

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தவெகவின் ஆதவ் அர்ஜுனா வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக ஐடி விங் எடுத்துள்ள வீடியோ காட்சிகளை வாங்குவதற்காக காவல்துறை வந்துள்ளதா அல்லது சர்ச்சையான பதிவு குறித்து விசாரணை நடத்த வந்துள்ளதா என்று சரியான தகவல் வெளியாகவில்லை.

error: Content is protected !!