News October 1, 2025

₹1000 அபராதம் … வந்தது அறிவிப்பு

image

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Similar News

News October 1, 2025

BREAKING: தங்கம் விலை புதிய Record… இதுவே முதல்முறை

image

தங்கம் விலை ₹87 ஆயிரத்தை கடந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹10,890-க்கும், 1 சவரனுக்கு ₹240உயர்ந்து ₹87,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த10 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹4,800 அதிகரித்துள்ளது. இனி வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News October 1, 2025

மூலிகை: நொச்சி இலையின் மருத்துவ பயன்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, நொச்சி இலைச் சாறு கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கங்களை குணமாக்கும் தன்மை கொண்டவை *நொச்சி இலைச் சாறை இரவில் கட்டிகள் மீது பற்றுப் போட்டுவர அவை கரையும் *நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும் *நொச்சி இலைச்சாறு. மிளகுத்தூள், நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். SHARE.

News October 1, 2025

கதராடைகள் அணிந்திட CM ஸ்டாலின் வேண்டுகோள்

image

நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரை நினைவு கூர்ந்திடும் வகையில் அனைவரும் கதராடைகளை அணிய CM ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். நெசவாளர்களின் வாழ்வை மேம்படுத்த மாணவர்கள், அரசு அலுவலர்கள் கதராடைகளை வாங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்றிட கதர் கிராம தொழில் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!