News October 1, 2025

இந்து அல்லாதோர் கோயில் முன்பு.. பாஜக Ex MP சர்ச்சை

image

இந்துக்கள் அல்லாதவர்கள் கோயில் பிரசாதம் விற்றால், அவர்களை அடித்து நொறுக்குங்கள் என பாஜக முன்னாள் MP பிரக்யா தாகூர் சர்ச்சையாக தெரிவித்துள்ளார். போபாலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நவராத்திரி விழாவில் பேசிய அவர், இந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள் என கூறினார். மேலும், பிற மடத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாடம் கற்பிக்க வீட்டிலேயே ஆயுதங்களை வைத்திருங்கள் என்றார்.

Similar News

News October 1, 2025

கோவில்பட்டி: அரிவாளுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் கார்த்திக் (21), சூரியகுமாரர் (23) ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்து அரிவாள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 1, 2025

Sports roundup: சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்

image

*புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ்
*ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்
*ஐஎல்​டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி​யில் இணைந்த தினேஷ் கார்த்திக்
*இந்தியா – மே.இ. தீவுகள் முதல் டெஸ்டில் நாளை மோதல்
*சீனா ஓபன் டென்னிஸ்: காயத்தால் அரையிறுதியில் விலகிய மெத்வதேவ்

News October 1, 2025

மல்லிகார்ஜுன கார்கே ஹாஸ்பிடலில் அனுமதி

image

உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் காய்ச்சல் காரணமாக கார்கே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து பரிசோதித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!