News October 1, 2025

OG vs GBU? இயக்குநர் விளக்கம்

image

தெலுங்கில் மாஸ் காட்டி வரும் ‘OG’ படத்தை அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அதன் இயக்குநர் சுஜித், தான் இப்படத்தின் டீசரை வெளியிட்டபோது, ஆதிக் ரவிச்சந்திரன் ‘GBU’-வின் எழுத்து பணியை கூட தொடங்கவில்லை என தெரிவித்துள்ளார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் முதலே ஆதிக்கை தனக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News March 16, 2026

எலும்பு பலவீனமா இருக்கா? அப்போ இத சாப்பிடுங்க..

image

40 வயதை தொட்டதும் எலும்புகள் பலவீனமடைவது இயல்புதான். அதை தவிர்க்க பலரும் கால்சியம் சப்ளிமெண்ட் எடுப்பதை பார்க்கிறோம். ஆனால், கால்சியம் நிறைந்த இந்த உணவுகளை சேர்த்துக்கொண்டால், சப்ளிமெண்ட்டே இல்லாமல் எலும்பை வலிமையாக மெயிண்டெயின் செய்யலாம் *கேழ்வரகு *முருங்கைக்கீரை *100 கிராம் கறிவேப்பிலை *எள்ளு, *கசகசா விதைகள் உள்ளிட்டவை எலும்பை பலப்படுத்தி இளமையாகவே உணர செய்யும். இன்னைக்கே சாப்பிட ஆரம்பிங்க!

News March 16, 2026

தமிழகத்தில் 4 மாவட்ட SP-க்கள் அதிரடி மாற்றம்

image

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகருக்கு புதிய SP-க்களை நியமித்து ECI உத்தரவிட்டுள்ளது. கரூர்: ஹரிகிரண் பிரசாத், ஈரோடு: கிரண் ஸ்ருதி, நாகை: சுர்ஜித் குமார், விருதுநகர்: ஸ்ரீநாதா ஆகியோர் SP-க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கரூர் SP ஜோஷ் தங்கையா பாரபட்சமாக செயல்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். மாற்றப்பட்ட SP-க்கள் தேர்தல் தொடர்பான வேறு எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது எனவும் ECI கூறியுள்ளது.

News March 16, 2026

பதவி பறிக்கப்படும்: ஸ்டாலின் எச்சரிக்கை

image

தேர்தல் முடியும் வரை எந்த உள்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது என்று திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேவையின்றி குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால், எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!