News October 1, 2025
நெப்போலியன் பொன்மொழிகள்

*உங்கள் எதிரி தவறிழைத்துக் கொண்டிருக்கும் போது அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.
*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே உள்ளது.
*ஒரு விஷயம் சிறப்பாக செய்யப்பட வேண்டுமானால் அதை நீங்களே செய்யுங்கள்.
*நீர், காற்று மற்றும் சுகாதாரமே எனது மருந்தகத்தில் இருக்கும் முக்கியப் பொருட்கள்.
*மனிதர்கள் அவர்களது தேவைகளையே கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர் – திறமைகளை அல்ல.
Similar News
News October 1, 2025
மழை சீசனில் இந்த மூலிகை தேநீரை குடிங்க!

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு மூலிகை தேநீர் நல்ல நிவாரணம் தரும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *தேவையான பொருள்கள்: துளசி, இஞ்சி, ஏலக்காய் பொடி, மிளகு பொடி, சீரகம், பட்டை பொடி, மஞ்சள், டீ தூள் & வெல்லம் ★செய்முறை: தண்ணீரில் துளசி இலையுடன், டீ தூள், சீரகம் என அனைத்தையும் போட்டு கொதிக்க வைங்க. இஞ்சியை தட்டிப்போட்டு, நன்கு கொதித்த பிறகு, வடிகட்டி குடிக்கவும். SHARE IT.
News October 1, 2025
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓபனிங் ஆடலாம்: அஸ்வின்

2026 T20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, 15 T20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. எனவே, இந்த T20 போட்டிகளில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஓபனிங் பேட்டராக களமிறக்க வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். அவரும், அபிஷேக் சர்மாவும் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில்லின் ஆட்டம் விமர்சனத்திற்குள்ளான நிலையில், அஸ்வின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
ஆதவ் அர்ஜுனா கைதா?

இலங்கை, நேபாளத்தில் இளைஞர்கள், genz தலைமுறையினர் எப்படி அதிகாரத்துக்கு எதிராக புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதேபோல் இங்கும் நிகழும் என்று அர்ஜுனா வெளியிட்ட பதிவு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அவருக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முக்கிய பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.