News October 1, 2025
வாவ்.. இவ்வளவு உயரத்தில் பாலமா?

இவ்வளவு உயரத்தில் பாலமா? அதுவும் இவ்வளவு நீளமா? படங்களில், கிராபிக்ஸ் காட்சிகளில் மட்டும் இதுபோன்று நாம் பார்த்திருப்போம். இதனை சீனா ரியலாக செய்து முடித்துள்ளது. உலகின் மிக உயரமான பாலத்தை கட்டி, போக்குவரத்துக்கும் திறந்துவிட்டது. நதியிலிருந்து சுமார் 2,050 அடி உயரத்தில் மற்றும் 4,600 அடி நீளமுள்ள இந்த பாலம், மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ரைடு போனா எப்படி இருக்கும்?
Similar News
News October 1, 2025
திமுக ஆட்சியில் ₹8,000 கோடி வரி இழப்பு: RB உதயகுமார்

திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் டாஸ்மாக் மூலம் ₹12 லட்சம் கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக RB உதயகுமார் தெரிவித்துள்ளார். அதேநேரம், ₹8,000 கோடி அளவில் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நிதி மேலாண்மையில் திமுக அரசு 100% தோல்வியடைந்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். வரி ஏய்ப்பில் ஈடுபட்ட அந்த சார் யார் என்றும் அவர் வினவியுள்ளார்.
News October 1, 2025
திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் PHOTOS

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 7ஆம் நாளான இன்று, சந்திர பிரபா வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதிகளில் பிரம்மாண்டமாக ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு வகையான கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பக்தர்களை மகிழ்வித்தன.
News October 1, 2025
சூர்யாவின் வாடிவாசல் டிராப்?

சிம்புவை வைத்து கேங்ஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இப்படம் 2027-லேயே வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக ‘வடசென்னை 2’ படத்தை எடுக்கவுள்ளார். அதேநேரம், வெங்கி அட்லூரி, ஜீத்து மாதவன், பா.ரஞ்சித் ஆகியோரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார் சூர்யா. இதனால் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வாடிவாசல்’ படம் டிராப் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.