News April 14, 2024
காலி குடங்களுடன் சாலை மறியல்

ராணிப்பேட்டை, லாலாபேட்டை ஊராட்சியில் உள்ள சில வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து இன்று காலை ராணிப்பேட்டை பொன்னை சாலையில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கு சென்று சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
Similar News
News November 6, 2025
தீவிர திருத்த கணக்கு சீட்டு வழங்கிய ஆட்சியர் சந்திரகலா

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி, இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.5) ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு நகராட்சி தனியார் மஹால் தெருவில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதை பார்வையிட்டார்கள். உடன் வட்டாட்சியர் மகாலட்சுமி, ஆணையாளர் சுரேஷ் குமார் இருந்தனர்.
News November 6, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 5, 2025
ராணிபேட்டை மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!


