News September 30, 2025
தருமபுரி ஆட்சியரின் விரைவான நடவடிக்கை

தருமபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியின்போது, மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீசிடம் கோரிக்கை மனுவை அளித்தார். இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒரு மணி நேரத்திலேயே மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், அந்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மூன்று சக்கர நாற்காலியினை வழங்கினார்.
Similar News
News March 11, 2026
தருமபுரிக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் தருமபுரி வருகை தந்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகளை ஆ.மணி எம்.பி., மு.அமைச்சர் பழனியப்பன் & மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் வாகன நிறுத்தம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
News March 11, 2026
தருமபுரி: மாத்திரை மாறி உண்ட முதியவர் மரணம்

தருமபுரி அருகே உங்களானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் (91) என்பவர், இருமல் மாத்திரைக்குப் பதிலாகத் தவறுதலாக வேறு மாத்திரையை உட்கொண்டார். இதனால் வாயில் நுரை தள்ளி மயங்கிய அவர், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பகிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 11, 2026
தர்மபுரி மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (10.3.2026) இரவு முதல் இன்று (11.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


