News September 30, 2025
விஜய் சொல்வது சரியா?

கரூரில் துயரத்துக்கு பின், தான் அங்கு மீண்டும் சென்றிருந்தால், அதனால் வேறொரு பதற்றமான சூழல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அங்கு செல்லவில்லை என்று <<17876190>>விஜய் கூறியுள்ளார்<<>>. இதை விமர்சித்துள்ள பலரும், விஜய் போகவில்லை சரி, தவெக நிர்வாகிகள் ஏன் போகவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இந்த சூழ்நிலையில் செய்வதறியாமல் தொண்டர்கள் செயலற்று இருந்ததற்கு என்ன காரணம் என்றும் கேட்கின்றனர். உங்க கருத்து?
Similar News
News October 1, 2025
USA அமைச்சர் பதிலடி வேண்டாம் என்றார்: ப.சிதம்பரம்

பயங்கரவாதத்துக்கு எதிராக காங்., அரசு மென்மையாக நடந்துகொண்டது என்று பாஜக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அப்போதைய USA வெளியுறவு அமைச்சர் பாக்.,க்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என தெரிவித்ததாக கூறினார். மேலும், அரசின் பலம், பலவீனத்தால் பதிலடி கொடுக்க முடிவெடுக்கவில்லை என்றார்.
News October 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 475 ▶குறள்: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். ▶பொருள்: மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.
News October 1, 2025
மீண்டும் ஓடிடியில் அன்னபூரணி

2023-ல் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ படம் சர்ச்சையில் சிக்கியது. இதனையடுத்து, அப்படம் Netflix ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், JioHotstar ஓடிடி தளத்தில் இப்படம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 2024, ஆக.9-ல் Simply South ஓடிடி தளத்தில் இந்தியாவை தவிர பிற நாடுகளில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.