News September 30, 2025
கூட்ட நெரிசலுக்கு ஆம்புலன்ஸ் காரணமா? அரசு விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலுக்கு ஆம்புலன்ஸ் அடிக்கடி வந்ததே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பரப்புரை பகுதியில் 6 ஆம்புலன்ஸ்கள் இருந்ததாகவும், மயங்கியவர்களுக்கு சிகிச்சை தேவை என அழைப்பு வந்ததால் கூட்டத்திற்குள் 7.20, 7.30 மணிக்கு ஆம்புலன்ஸ் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலுக்கு பிறகே தனியார் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன என்றும் அரசு கூறியுள்ளது.
Similar News
News October 1, 2025
மீண்டும் ஓடிடியில் அன்னபூரணி

2023-ல் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ படம் சர்ச்சையில் சிக்கியது. இதனையடுத்து, அப்படம் Netflix ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், JioHotstar ஓடிடி தளத்தில் இப்படம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 2024, ஆக.9-ல் Simply South ஓடிடி தளத்தில் இந்தியாவை தவிர பிற நாடுகளில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 1, புரட்டாசி 15 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News October 1, 2025
கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்க BJP வலியுறுத்தல்

கரூர் சம்பவம் தொடர்பாக SC நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை தேவை என்று அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார். BJP அமைத்த குழுவினர், கரூரில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இச்சம்பவத்தின் போது போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது என ஆளுங்கட்சி பதிலளிக்க வேண்டும் என்றார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவும் அனுராக் வலியுறுத்தினார்.