News September 30, 2025
புதுவை ஆளுநர் மாளிகையில் ஆயுத பூஜை விழா

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று ஆயுத பூஜை விழா பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் மாளிகையின் அரசு அலுவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
Similar News
News March 13, 2026
புதுச்சேரியில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்

லாஸ்பேட்டை போலீசார் ஏர்போர்ட் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வேகமாக வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர் 630 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேலும் விசாரித்ததில் அவர் பெயர் சந்தோஷ் என்பதும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 630 கிராம் கஞ்சா இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
News March 12, 2026
புதுச்சேரி: பாதுகாப்பு குறைபாடு – நடவடிக்கை எடுக்க பரிந்துரை

புதுச்சேரி ஆளுநர் தற்காலிகமாக தங்கியிருக்கும் மாளிகைக்குள், கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் அத்துமீறி நுழைந்துள்ளார். இது சம்பந்தமாக பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த ஆயுதப்படை காவலரை பணிநீக்கம் செய்யவும், அவருடன் பணியில் இருந்த 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யவும் டி.ஜி.பி ஷாலினி சிங்குக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார்.
News March 12, 2026
புதுச்சேரி: எரிபொருள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

புதுச்சேரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோக நிலைமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு), கூடுதல் மாவட்ட ஆட்சியர், அரசு துறை அதிகாரிகள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


