News April 14, 2024
மலைக்கோட்டையில் சித்திரை திருவிழா

திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை சாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரத்திற்கு வந்தார். அதன் பின்பு தீப ஆரத்திகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
Similar News
News April 19, 2025
திருச்சி: கோடை கால சுற்றுலா செல்ல சூப்பர் இடம்!

திருச்சியில் அடிக்கிற வெயிலுக்கு இதமா எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்க. திருச்சிக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை, ஒரு பசுமையான மலைத்தொடராகும். நீர்வீழ்ச்சிகள், பசுமையான தோட்டங்கள் என பச்சை மலைக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. திருச்சியில் இருந்து ஒரே நாளில் கிளம்பி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்ப இது சூப்பர் இடமாகும். SHARE!
News April 19, 2025
முதுநிலை நீட்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் முதுநிலை நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூன்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொடங்கியுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் மே.7-ம் வரை விண்ணப்பிக்கலாம் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
News April 19, 2025
போலி பதநீர் விற்பனை – சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக பதநீர் அதிகம் விற்பனையாகிறது. இதில் அதிகம் போலியானவை. எனவே பதநீர் பருகும் போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும். பலர் பதநீருக்கு பதில் அதே சுவை கொண்ட பவுடர்களை சர்க்கரையில் சேர்த்து பதநீர் போல விற்பனை செய்கின்றனர். இதில் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.