News September 30, 2025
ஊட்டி தாவரவியல் பூங்காவில் கவரும் மலரலங்காரம்

நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. காலாண்டு விடுமுறையையும் ஒட்டி, வெளி மாநில மற்றும் வெளி மாவட்டச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், இங்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
Similar News
News March 12, 2026
நீலகிரி மக்களே உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா? CHECK IT!

நீலகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News March 12, 2026
ஊட்டி: பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு!

ஊட்டி அப்பர்பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் மது அருந்திவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்குவாதம் தகராறாக மாறியதால், அங்கு வந்த ஊட்டி மத்திய போலீஸ் நிலைய காவலர் பிரபு இளைஞர்களிடம் அமைதியாக செல்லும்படி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரபுவை பீர் பாட்டிலால் தாக்கினர். இதையடுத்து நிஷாந்த், அகமதுல்லா, டேனிஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
News March 12, 2026
குன்னூர் அருகே விபத்து!

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திரு விஷ்ணுகுமார் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்று டூவீலரில் கோவை திரும்பும் வேலையில் குன்னூர் அருகே சென்ற போது விபத்தில் சிக்கினார். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


