News September 30, 2025
இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, TNPSC அண்மையில் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி ₹1,000 கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பயனாளிகளை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க உள்ளார்களாம். SHARE IT.
Similar News
News October 1, 2025
எண்ணூர் விபத்து: ₹10 லட்சம் நிதியுதவி CM அறிவித்தார்

எண்ணூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கட்டுமானப் பணியின் போது 9 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்கி CM உத்தரவிட்டுள்ளார். இதே போல PM மோடி உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஆதவ் அர்ஜுனா மீது பின்வரும் 5 பிரிவுகளில் சென்னை சைபர் க்ரைம் போலீஸ் வழக்குப் பதிந்துள்ளது. *192- கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு. *196(1)பகையை வளர்க்கும் செயல். *197(1)(d) இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு தீங்கு விளைவித்தல். *353(1)(b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வதந்திகளை வெளியிடுவது. *353(2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவல் வெளியிடுதல். அடுத்து என்ன ஆகும்?
News October 1, 2025
சிக்கன் குழம்பு கேட்ட 7 வயது மகனை கொன்ற தாய்

மகாராஷ்டிராவில் 7 வயது சிறுவன் தனது தாயிடம் சிக்கன் குழம்பு செய்துகொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் எரிச்சலான தாய், பூரி கட்டையால் தனது மகனை அடித்து கொன்றுவிட்டு, மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். ஆனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து போலீசாரிடம் தெரிவிக்க, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.