News September 30, 2025
விஜய் செய்தது சரியா? அதிகரிக்கும் விமர்சனங்கள்

கரூர் துயரம் நடந்து 3 நாள்களுக்கு பின் இன்று வீடியோ வெளியிட்ட விஜய், 41 பேர் மரணத்திற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவித்தார். ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை. இதை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் அதற்கு தார்மிகப் பொறுப்பு ஏற்கவோ, அந்த பாதிப்புக்கு மன்னிப்பு கேட்கவோ செய்யாதது, பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் என பலரும் விமர்சித்துள்ளனர்.
Similar News
News October 1, 2025
எல்லோருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்!

*அறிவின் தெய்வம் சரஸ்வதி உங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறந்த அறிவையும் ஞானத்தையும் வழங்க வாழ்த்துகள். *கல்வியின் அதிபதியை சரஸ்வதி பூஜை நன்னாளில் போற்றுவோம். *அறிவுக் கடவுளின் அருளால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரட்டும். *படிப்பிற்கும், செல்வத்திற்கும் அதிபதியான சரஸ்வதி தேவியின் அருள் உங்களை சேர சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் இதை SHARE பண்ணுங்க..
News October 1, 2025
எண்ணூர் விபத்து: ₹10 லட்சம் நிதியுதவி CM அறிவித்தார்

எண்ணூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கட்டுமானப் பணியின் போது 9 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்கி CM உத்தரவிட்டுள்ளார். இதே போல PM மோடி உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஆதவ் அர்ஜுனா மீது பின்வரும் 5 பிரிவுகளில் சென்னை சைபர் க்ரைம் போலீஸ் வழக்குப் பதிந்துள்ளது. *192- கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு. *196(1)பகையை வளர்க்கும் செயல். *197(1)(d) இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு தீங்கு விளைவித்தல். *353(1)(b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வதந்திகளை வெளியிடுவது. *353(2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவல் வெளியிடுதல். அடுத்து என்ன ஆகும்?