News September 30, 2025
பிரபல தமிழ் நடிகர் மனைவியை பிரிந்தார்… DIVORCE

ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2013-ல் திருமணம் செய்து கொண்ட இருவரும், கடந்த ஆண்டு மண வாழ்வில் கசப்பு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து கோரியிருந்தனர். பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் கூறிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், தனது குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
Similar News
News October 1, 2025
சிக்கன் குழம்பு கேட்ட 7 வயது மகனை கொன்ற தாய்

மகாராஷ்டிராவில் 7 வயது சிறுவன் தனது தாயிடம் சிக்கன் குழம்பு செய்துகொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் எரிச்சலான தாய், பூரி கட்டையால் தனது மகனை அடித்து கொன்றுவிட்டு, மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். ஆனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து போலீசாரிடம் தெரிவிக்க, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News September 30, 2025
ராசி பலன்கள் (01.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 30, 2025
மகளை பெற்ற தந்தையா… ஹேப்பி நியூஸ்

மகளை பெறாத தந்தையரை விட, மகளை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம். SHARE