News September 30, 2025
கரூர் செல்வேன்: விஜய் அறிவிப்பு

கரூர் துயரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என விஜய் கூறியுள்ளார். <<17876190>>இன்று வெளியிட்ட வீடியோவில்<<>>, கூடிய விரைவில் கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பங்களை சந்திப்பேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தில் காயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் விஜய் பேசியுள்ளார்.
Similar News
News September 30, 2025
அக்.2 அன்று பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.
News September 30, 2025
விஜய் சொல்வது சரியா?

கரூரில் துயரத்துக்கு பின், தான் அங்கு மீண்டும் சென்றிருந்தால், அதனால் வேறொரு பதற்றமான சூழல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அங்கு செல்லவில்லை என்று <<17876190>>விஜய் கூறியுள்ளார்<<>>. இதை விமர்சித்துள்ள பலரும், விஜய் போகவில்லை சரி, தவெக நிர்வாகிகள் ஏன் போகவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இந்த சூழ்நிலையில் செய்வதறியாமல் தொண்டர்கள் செயலற்று இருந்ததற்கு என்ன காரணம் என்றும் கேட்கின்றனர். உங்க கருத்து?
News September 30, 2025
வாயில் முதலையுடன் ராட்சத டைனோசர்

அர்ஜென்டினாவில் சுமார் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய டைனோசர் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டைனோசரின் தாடைகளுக்கு இடையே முதலையின் கை எலும்பு இருந்துள்ளது. 23 அடி (7 மீட்டர்) நீளமுள்ள இந்த டைனோசரின் மண்டை ஓடு, கைகால்கள் மற்றும் வால் பகுதிகள் கிடைத்துள்ளது. மேலே, இந்த பெரிய ராட்சத டைனோசரின் போட்டோக்கள் உள்ளன. ஸ்வைப் செய்து பாருங்க.