News September 30, 2025

விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மல்லிப்பூ கிலோ ₹1,000-க்கு விற்பனையாவதாக மதுரை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, முல்லை ₹700, செவ்வந்தி ₹220, சம்பங்கி ₹200, செண்டு மல்லி ₹60, கனகாம்பரம் ₹1200, ரோஸ் ₹250, பட்டன் ரோஸ் ₹280-க்கு விற்பனையாகிறதாம். பூக்களுடன் பழங்கள், காய்கறிகள் விலையும் இந்த பண்டிகைக் காலத்தில் தமிழகம் முழுவதும் உயர்ந்துள்ளது.

Similar News

News September 30, 2025

அனைத்து ரேஷன் கார்டுக்கு ₹5,000… வெளியான புது தகவல்

image

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

News September 30, 2025

அதிகம் தேடப்பட்ட தீபிகா!

image

நடிகர்கள் மட்டும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் சினிமா உலகில், நடிகை தீபிகா படுகோனே சாதனை படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட இந்திய சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் தீபிகா படுகோனே முதலிடத்தில் இருப்பதாக IMDB தெரிவித்துள்ளது. இதனை, ஜனவரி 2014 – ஏப்ரல் 2024 வரையில் உள்ள வாராந்திர தரவரிசையின் அடிப்படையில், IMDB தெரிவித்துள்ளது. ஷாருக் கான் 2ஆவது இடத்தில் உள்ளார்.

News September 30, 2025

மக்களை பாதுகாப்பதில் TN அரசு தோல்வி: EPS

image

கரூர் துயரத்திற்கான பொறுப்பில் இருந்து தப்பிக்க ஸ்டாலின் அரசு முயல்வதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கெனவே அருணா ஜெகதீஷன் ஆணையம் விசாரிக்கும் நிலையில், வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க, விபத்துக்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது என்றும் EPS சாடியுள்ளார்.

error: Content is protected !!