News September 30, 2025

நீலகிரி: போலியான லோன் ஆப் எச்சரிக்கை!

image

நீலகிரி மக்களே பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் செய்யுங்கள். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 13, 2026

உதகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்

image

உதகை ஏடிசி திடலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், செயலாளர் பாமா ரமேஷ் முன்னிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை புழக்கத்தைத் தடுக்கத் தவறிய மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

News March 12, 2026

நீலகிரி: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!