News September 30, 2025

கிருஷ்ணகிரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <>www.tnesevai.tn.gov.in<<>>, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 11, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான இணைய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இணையதளங்களில் உள்நுழையும் போது ‘Keep me logged in’ அல்லது ‘Remember me’ போன்ற வசதிகளை குறிப்பாக பொது கணினிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்தால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

News March 10, 2026

கிருஷ்ணகிரி போலீஸ் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி: மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு எதிராக மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் தீவிர விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. “மது உடல்நலத்திற்கு கேடு, புகை உயிரைக் கொல்லும்” என எச்சரித்துள்ள போலீசார், ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!