News September 30, 2025
புதுவை: கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது

புதுவை வில்லியனுார் சாமியார் தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் மூவரை பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ், மற்ற 2 பேரும் சிறுவர்கள் என தெரியவந்தது. இதனை அடுத்து, தினேஷை கைது செய்து சிறையிலும், இரு சிறுவர்களையும் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.
Similar News
News March 11, 2026
புதுவை: தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

காரைக்கால், கீழ காசாக்குடியைச் சேர்ந்தவர் வேம்பு. இவரது மூத்த மகன் ராகவன், கோட்டுச்சேரி மெக்கானிக் கடை ஒன்றில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடி போதையில் இருந்த ராகவனை, அவரது தாய் வேம்பு கண்டித்ததால் மனமுடைந்த ராகவன் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 11, 2026
புதுச்சேரி: முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று அறிவித்தார்.
News March 11, 2026
புதுச்சேரி: மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர்

புதுச்சேரி, மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில், ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


