News April 14, 2024
திரையில் ஜொலித்தார், அரசியலில் ஜொலிப்பாரா?

கிழக்கே போகும் ரயில் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ராதிகா சரத்குமார், சித்தி உள்ளிட்ட தொடர்கள் மூலம் சின்னத் திரையிலும் நுழைந்து இல்லத் தரசிகளை கட்டிப் போட்டார். அவர் தற்போது விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். திரைத் துறை பிரபலங்கள் அரசியலில் சாதிக்கவும் செய்துள்ளனர், தோல்வியும் அடைந்துள்ளனர். இதில் எந்த வரிசையில் ராதிகா சேர்வார்? என்பதை அத்தொகுதி மக்களே அறிவர்.
Similar News
News January 22, 2026
சென்னையில் சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை கீழ்ப்பாக்கம் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவனை வளர்ப்பு நாய் கடித்து குதறி உள்ளது. மேனியல் என்பவர் தனது நாயை இன்று நடைபயிற்சி அழைத்து சென்றபோது சிறுவனின் மார்பு, தொடை பகுதியில் கடித்துள்ளது. பலத்த காயம் அடைந்த சிறுவன் கீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
இபிஎஸ்-ஐ ஆதரிக்க சசிகலா முடிவு!

அதிமுகவில் நடந்து வந்த ஒருங்கிணைப்பு, ஒற்றைத் தலைமை, துரோகி என்ற சண்டைகள் எல்லாம் தற்போது பங்காளி சண்டை எனப் பதம் மாறியுள்ளன. நேரடியாக ஒருங்கிணைப்பு இல்லாவிட்டாலும், திமுகவுக்கு எதிரான வெற்றி என்ற நிலைப்பாட்டுடன் இபிஎஸ்-க்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை TTV எடுத்துள்ளார். சசிகலாவும் அதே மனநிலையில் இருப்பதாகவும், தனது ஆதரவாளர்களிடம் இது குறித்து நேற்று பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 22, 2026
சிம்பு – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் புதிய படம்!

‘அரசன்’படத்தில் பிஸியாக உள்ள சிம்புவிடம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதையை சொல்லி ஓகே செய்துள்ளார். ‘அரசன்’ படம் முடிந்த கையோடு அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வருடம் ‘அரசன்’ அடுத்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பில் 2 முக்கியமான படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


