News September 30, 2025

ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி: விஜய்

image

கரூர் துயரச் சம்பவத்தின் போது, தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். சற்றுமுன் வெளியிட்ட <<17876190>>வீடியோவில்<<>> பேசிய அவர், எங்களின் வலிகளை, நிலைமைகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டார். இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் விஜய்மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.

Similar News

News September 30, 2025

மக்களை பாதுகாப்பதில் TN அரசு தோல்வி: EPS

image

கரூர் துயரத்திற்கான பொறுப்பில் இருந்து தப்பிக்க ஸ்டாலின் அரசு முயல்வதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கெனவே அருணா ஜெகதீஷன் ஆணையம் விசாரிக்கும் நிலையில், வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க, விபத்துக்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது என்றும் EPS சாடியுள்ளார்.

News September 30, 2025

யூட்யூப் காட்டி சோறு ஊட்டும் பெற்றோரா?

image

யூட்யூப் காட்டித்தான் இன்று குழந்தைகளை வளர்க்கவே செய்கிறோம். பாடல்கள், கார்ட்டூன், கேம்ஸ் என வீட்டில் மட்டுமல்லாது பொது இடங்களிலும் குழந்தைகளிடம் போனை கொடுத்துவிடுகிறோம். இதனால் சிறுவயதிலேயே கண் பிரச்னைகள், தூக்கமின்மை, மன உளைச்சல் வரை ஏற்படுகின்றன. குழந்தைகளை Phone Addict-ஆக மாற்றுவதற்கு பதிலாக, கதை சொல்லி, பாட்டு பாடி, குடும்பத்தினருடன் ஒன்றாக அமரவைத்து அவர்களுக்கு சோறு ஊட்டலாம்.SHARE.

News September 30, 2025

மாணவர்களே இதை ட்ரை பண்ணுங்க.. சூப்பரா இருக்கும்

image

மாணவர்கள், படிப்பதற்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தினால் எளிதாக அவர்களது இலக்கை அடைய முடியும். நேரத்தை எப்படி பயன்படுத்தலாம்? என்ன செய்யலாம்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை இதுபோன்று நேரத்தை பயன்படுத்த பயிற்சி கொடுங்கள். உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!