News September 30, 2025
ஒரே வாரத்தில் உச்சம் தொட்ட ‘Zoho mail’

Zoho-வின் ‘Arattai’ ஆப் போலவே, ‘Zoho Mail’-ம் மக்களால் அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வரை, 10 லட்சம் யூஸர்கள் மட்டுமே இருந்த நிலையில், அது தற்போது 50 லட்சத்தை கடந்துள்ளது. உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டுமென PM மோடி சொன்னதால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தானும் ‘ZohoMail’-க்கு மாறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 30, 2025
இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, TNPSC அண்மையில் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி ₹1,000 கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பயனாளிகளை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க உள்ளார்களாம். SHARE IT.
News September 30, 2025
இந்த நாடுகள் இவ்வளவு பழசா?

இந்த உலகத்தில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால், சில நாடுகள், இன்றும் அதன் வேர்களை பல்லாயிரம் ஆண்டுகளை கடந்து தற்போதும் சுமந்து நிற்கின்றன. அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று வேறு ஏதேனும் பழமையான நாடு உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 30, 2025
டிரம்பின் வரிகள் இந்திய வளர்ச்சியை பாதிக்கும் – ADB

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB)குறைத்துள்ளது. 2026 நிதியாண்டில் 6.7% வளர்ச்சியடையும் என்று மதிப்பிட்டு இருந்தது. தற்போது, வரிகளால் பொருளாதாரம் 2026 & 2027 இரண்டு நிதி ஆண்டுகளிலும் 6.5% வளர்ச்சிதான் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.