News September 30, 2025
BREAKING: ஒருநாள் கூடுதல் விடுமுறை.. அறிவித்தது அரசு

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்.3-ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.1 சரஸ்வதி பூஜை, அக்.2 காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 2 நாள்கள் விடுமுறையாகும். அதன்பின் அக்.4, 5 (சனி, ஞாயிறு) விடுமுறை வருகிறது. அக்.3-ம் தேதி மட்டும் பணி நாளாக இருப்பதால், விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News September 30, 2025
இந்த நாடுகள் இவ்வளவு பழசா?

இந்த உலகத்தில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால், சில நாடுகள், இன்றும் அதன் வேர்களை பல்லாயிரம் ஆண்டுகளை கடந்து தற்போதும் சுமந்து நிற்கின்றன. அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று வேறு ஏதேனும் பழமையான நாடு உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 30, 2025
டிரம்பின் வரிகள் இந்திய வளர்ச்சியை பாதிக்கும் – ADB

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB)குறைத்துள்ளது. 2026 நிதியாண்டில் 6.7% வளர்ச்சியடையும் என்று மதிப்பிட்டு இருந்தது. தற்போது, வரிகளால் பொருளாதாரம் 2026 & 2027 இரண்டு நிதி ஆண்டுகளிலும் 6.5% வளர்ச்சிதான் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 30, 2025
WC: இந்திய அணி ஏமாற்றம்

பெண்கள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 37 ஓவர்களில் 191/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில், நிதானமாகவே ஆடி வருகின்றனர். பிரதிகா ராவல் -37, ஹார்லின் டியோல் -48 ரன்கள் எடுத்தனர். ஸ்மிரிதி 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தற்போது தீப்தி சர்மா (31), அமஞ்சோத் கவுர் (37) களத்தில் உள்ளனர்.