News September 30, 2025
அதிக லாபம் தரும் Petrol Bunk பிசினஸ்; தொடங்குவது எப்படி?

➤Petrol Bunk திறக்க சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து, பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து(IOCL/BPCL/HPCL) உரிமம் பெற வேண்டும் ➤இதற்கு அந்நிறுவனத்தின் Website-க்கு சென்று விண்ணப்பிக்கலாம் ➤இதையடுத்து அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி, தீ பாதுகாப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகள் வாங்க வேண்டும் ➤இந்த தொழிலுக்கு சுமார் ₹1.5 கோடி முதலீடு செய்யவேண்டியிருக்கும் என்கின்றனர். SHARE.
Similar News
News September 30, 2025
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: IMD

அந்தமான் கடற்பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல சுழற்சியால், வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.2-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அக். 3 வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
News September 30, 2025
Railway Station-க்கு இத எடுத்துட்டு போனா உயிருக்கே ஆபத்து

தண்டவாளத்துக்கு அருகில் உலோகத்தால் உருவாக்கப்பட்ட குடையை எடுத்துச்சென்றால் ஷாக் அடிக்கும் அபாயம் இருக்கிறதாம். ரயில் நிலையத்தில், மேல் செல்லும் கம்பிகளிலிருந்து ரயிலின் எஞ்சினுக்கு மின்சாரம் பாய்கிறது. இது தண்டவாளம் வழியாக நிலத்திற்கும் செல்லும். அப்போது தண்டவாளத்தின் அருகே நீங்கள் உலோக பொருளை வைத்திருந்தால் அதன்மூலம் உங்களுக்கு ஷாக் அடிக்கலாம். உயிர்காக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News September 30, 2025
விஜய் ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை: திருமா

விஜய்யின் வீடியோ எதிர்வினைகளை உருவாக்கும் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார். 3 நாள்கள் மவுனம் காத்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்காதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்ட நெரிசல் விவகாரத்தில் திமுக அரசை தொடர்புபடுத்திப் பேசுவது சரியல்ல என்ற அவர், உண்மையை பேசினால் தான் மக்கள் நம்பிக்கையை பெற முடியும் என்றார். இவரின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?