News April 14, 2024
21 ஆண்டுகளுக்கு பிறகு… என்ன நண்பா ரெடியா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘GOAT’ படத்தின் முதல் பாடலான “விசில் போடு…” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘புதிய கீதை’ படத்திற்கு பிறகு விஜய், யுவன் சங்கர் ராஜாவின் கூட்டணியில் இப்படத்தின் பாடல்கள் தயாராகியுள்ளன. 21 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்துள்ள இந்த கூட்டணியின் வெற்றியை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்பாடலை விஜய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 2, 2026
FLASH: நல்லகண்ணு மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதி

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். இவர் கடந்த சில மாதங்களாக வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
News February 2, 2026
OPS-ஐ TTV கழற்றிவிட இதுதான் காரணமா?

OPS-ஐ விட்டு TTV தினகரன் மட்டும் NDA கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேசப்பட்டது. ஆனால், கடைசி வரை OPS-ஐ இணைக்க TTV முயன்றாராம். முதலில் தனிக்கட்சி தொடங்கி NDA-ல் இணையும்படி OPS-யிடம் அவர் கூறியிருக்கிறார். அதனை OPS மறுக்க, அமமுகவில் சேர்த்து தேர்தலில் போட்டியிடவும் TTV பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ’EPS-யிடம் பேசுங்கள்’ என விடாபிடியாக இருந்ததால்தான் OPS-ஐ TTV கழற்றிவிட்டார் என்கின்றனர்.
News February 2, 2026
₹5,000 செய்யாததை ₹5 விசில் செய்யும்: N.ஆனந்த்

மற்ற கட்சியினரைப் போல அவதூறுகளில் நேரத்தை வீணடிக்காமல், சத்தமில்லாமல் விஜய் நிறைய நற்பணிகளை செய்திருக்கிறார் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இன்று ஊரெங்கும் ஒரே சத்தம்; அது விசில் சத்தம்தான் என்ற அவர், ₹2000, ₹3000, ₹5000 என யார் எவ்வளவு கொடுத்தாலும் சரி, இந்த ₹5 விசில் அனைவரையும் தோற்கடிக்கும் என்றார். மேலும், விஜய் இன்று அனைவரையும் வழிநடத்துவது பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.


