News April 14, 2024

திருவள்ளூர் அருகே பரபரப்பு

image

திருவேற்காடு நகராட்சியில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் அரி. இவரது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறி நேற்று மாலை நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அரி நகராட்சி அலுவலகத்தின் மொட்டை மாடியில் சென்று தீக்குளிக்க முயன்றார். உடனே சக ஊழியர்கள் அவரை அங்கிருந்து மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News August 10, 2025

திருவள்ளூரில் நோய்களைத் தீர்க்கும் வீரராகவர்

image

திருவள்ளூரில் அமைந்துள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலின் மூலவரான வீரராகவப் பெருமாள், பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் “வைத்தியர்” என்று அழைக்கப்படுகிறார். இங்கு வழங்கப்படும் நெய், பால் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் பிரசாதத்தை உட்கொண்டால், உடல்நலக் குறைபாடுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர்!

News August 10, 2025

திருவள்ளூர்: 10th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9543773337, 9360221280 எண்ணை அழைக்கவும். இப்பயிற்சி முடித்தால் வங்கிகளில் வேலை, நகைக்கடை, நகை அடகு கடை வைப்பது போன்ற தொழில்களுக்கு உதவியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க மக்களே!

News August 10, 2025

திருவள்ளூரில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள்!

image

▶️ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்
▶️ஸ்ரீ வீரராகவஸ்வாமி திருக்கோயில்
▶️வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில்
▶️பவானி அம்மன் திருக்கோயில், பெரியபாளையம்.
▶️அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி
▶️தேவி கருமாரி அம்மன் திருக்கோயில். இவை எல்லாம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான கோயில்களாகும். இதை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!