News September 30, 2025
‘வீடு தேடி வரும்’: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ் வரும் அக்டோபர் மாதம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்.5, 6 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் குடும்பத்திற்கு குடிமை பொருட்கள் அவர்களது இல்லங்களுக்கே சென்று நேரடியாக வழங்கப்பட உள்ளது. இந்த இரண்டு தினங்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களை அவர்களது இல்லங்களிலேயே பெற்று பயனடையுமாறு ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2026
திருச்சி: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News March 18, 2026
திருச்சி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 18, 2026
திருச்சி: அரசு மருத்துவமனையில் நவீன இதய சிகிச்சை!

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இதயத்துடிப்பு கோளாறுகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மற்றும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பெண்கள் 8 பேருக்கும், ஆண்கள் 5 பேருக்கும் என மொத்தம் 13 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.


