News April 14, 2024
லோகேஷின் அடுத்தப்படம் இதுதான்

தனித்துவமான ஸ்கிரீன்பிளே மூலம் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ‘ஃபைட் கிளப்’ படத்தை அவரது ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், சுல்தான் படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘Benz’ படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
பும்ராவை சமாளிப்பது கடினம் இல்லை: அஸ்வின்

2026 T20 WC-ல் இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை தடுக்க, அணியின் திறமையான வீரர்களான அபிஷேக் சர்மா & வருண் சக்கரவர்த்தியை வீழ்த்துவது எப்படி என எதிரணிகள் திட்டம் போடுவார்கள் என கூறியுள்ளார். இதுவரை பும்ராவை சமாளிப்பதுதான் கடினம் என கூறி வந்த அவர், எதிரணியினர் அதற்கான வழியை கண்டுபிடித்துவிட்டதால் பும்ரா பிரச்னையாக இருக்கமாட்டார் என தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
உங்கள் செல்போனில் உடனே இதை பாருங்க

➤Settings-ல் About device ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤version என்ற ஆப்ஷன் வரும், அதற்குள் சென்றால் Version Number இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால் developer option enable ஆகும் ➤மீண்டும் Settings-க்கு சென்று Additional Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤Developer option-ஐ க்ளிக் பண்ணி APPS ஆப்ஷனுக்குள் செல்லவும் ➤Dont Keep activities என்ற செட்டிங்கை ON பண்ணா Bg-ல் செயலிகள் இயங்காது. போனும் Hang ஆகாது. SHARE.
News November 9, 2025
PM நிகழ்ச்சியில் பங்கேற்றால் கூடுதல் மதிப்பெண்களா?

உத்தராகண்டில் உள்ள பல்கலை.,யின் பெயரில், PM மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்றால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என ஒரு அறிக்கை வெளியானது பரபரப்பை கிளப்பியது. பாஜக இளைஞர்களை மூளை சலவை செய்ய முற்படுவதாக பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த பல்கலை.,யில் இருந்து அப்படி எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும், அது போலியானது எனவும் தெரியவந்துள்ளது.


