News September 30, 2025

தவெக எந்த தவறும் செய்யவில்லை: N.ஆனந்த்

image

கரூர் விவகாரத்தில் தவெக எந்த தவறும் செய்யவில்லை என மதுரை HC-ல் ஜாமீன் கோரி N.ஆனந்த் மனு அளித்துள்ளார். அதில், கூட்டத்திற்கு குழந்தைகள், பெண்கள் வரவேண்டாம் என முன்கூட்டியே கூறியதாகவும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை கடமை தவறிவிட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் பொறுப்பேற்க முன்வரவில்லை என கண்டனங்கள் வலுக்கும் நிலையில், தங்களுடைய தவறு எதுவும் இல்லை என தவெக கூறியிருக்கிறது.

Similar News

News September 30, 2025

கரூர் செல்வேன்: விஜய் அறிவிப்பு

image

கரூர் துயரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என விஜய் கூறியுள்ளார். <<17876190>>இன்று வெளியிட்ட வீடியோவில்<<>>, கூடிய விரைவில் கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பங்களை சந்திப்பேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தில் காயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் விஜய் பேசியுள்ளார்.

News September 30, 2025

உங்க கண்களை பாதுகாக்க இதை செய்யுங்க!

image

கண்களின் ஆரோக்கியத்தில் அலட்சியம் செய்வது நம்மை மெதுவாக பாதிக்கின்றன. கண்கள் சரிவர பராமரிக்கப்படாவிட்டால், வயதானதும் பார்வை குறைபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கண் பார்வையை உறுதியாக வைத்திருக்க உதவும் சில விஷயங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எதை பாலோ பண்ணுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 30, 2025

விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மல்லிப்பூ கிலோ ₹1,000-க்கு விற்பனையாவதாக மதுரை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, முல்லை ₹700, செவ்வந்தி ₹220, சம்பங்கி ₹200, செண்டு மல்லி ₹60, கனகாம்பரம் ₹1200, ரோஸ் ₹250, பட்டன் ரோஸ் ₹280-க்கு விற்பனையாகிறதாம். பூக்களுடன் பழங்கள், காய்கறிகள் விலையும் இந்த பண்டிகைக் காலத்தில் தமிழகம் முழுவதும் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!