News September 30, 2025
தீபாவளி போனஸ்; வந்தாச்சு HAPPY NEWS

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகவுள்ளது. மத்திய அரசின் Group C, non-gazetted group B ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளம் (₹7,000), போனஸாக வழங்கப்படவுள்ளது. இதற்கு 6 மாதங்களுக்கு மேல் வேலை பார்த்திருக்க வேண்டும். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் சில நாட்கள் மட்டுமே பணியாற்றிய காலநியமன ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். SHARE.
Similar News
News September 30, 2025
உங்க கண்களை பாதுகாக்க இதை செய்யுங்க!

கண்களின் ஆரோக்கியத்தில் அலட்சியம் செய்வது நம்மை மெதுவாக பாதிக்கின்றன. கண்கள் சரிவர பராமரிக்கப்படாவிட்டால், வயதானதும் பார்வை குறைபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கண் பார்வையை உறுதியாக வைத்திருக்க உதவும் சில விஷயங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எதை பாலோ பண்ணுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 30, 2025
விலை கிடுகிடுவென உயர்ந்தது

ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மல்லிப்பூ கிலோ ₹1,000-க்கு விற்பனையாவதாக மதுரை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, முல்லை ₹700, செவ்வந்தி ₹220, சம்பங்கி ₹200, செண்டு மல்லி ₹60, கனகாம்பரம் ₹1200, ரோஸ் ₹250, பட்டன் ரோஸ் ₹280-க்கு விற்பனையாகிறதாம். பூக்களுடன் பழங்கள், காய்கறிகள் விலையும் இந்த பண்டிகைக் காலத்தில் தமிழகம் முழுவதும் உயர்ந்துள்ளது.
News September 30, 2025
கரூரில் இருந்து புறப்பட்டது ஏன்? விஜய் பதில்

கரூரை விட்டு புறப்பட்டதற்கான காரணத்தை விஜய் விளக்கியுள்ளார். நானும் மனுஷன் தான். அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த போது, எப்படி என்னால் ஊரை விட்டு கிளம்பி வர முடியும் என்று இருந்தேன். ஆனால், நான் சம்பவ இடத்திற்கு மீண்டும் சென்றிருந்தால் அதை காரணம் காட்டி, வேறொரு பதட்டமான சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே அதை தவிர்த்துவிட்டதாக விஜய் கூறியுள்ளார்.