News September 30, 2025

B.Ed, M.Ed மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

image

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். முதல் கட்ட கலந்தாய்விற்கு பின் அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இங்கே <>கிளிக் <<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 16, 2026

தூத்துக்குடி மாணவி கொலை; விசாரணை ஒத்திவைப்பு

image

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மாணவியின் கொலையை அறிவியல் பூர்வமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News March 16, 2026

தென்காசி: குற்றால அருவிகள் காலவரையின்றி மூடல்..!

image

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதால் இன்று (மார்ச்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் ஏற்கனவே குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2026

‘சந்தி சிரித்த சட்டம் – ஒழுங்கு’.. போராட்டம் அறிவித்த EPS

image

திமுக அரசை கண்டித்து NDA கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை TN முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்நாடு சீரழிவதாகவும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் CM ஸ்டாலின், விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட்களை நடத்துவதாக சாடியுள்ளார்.

error: Content is protected !!